
கோவை: அவிநாசி அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டல குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.