
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில், “திருச்சி துரை முருகன் நடத்தும் ’சாட்டை’ வலையொளிக்கும் (YouTube channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.