Blog முக்கிய செய்திகள்

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி எப்போது தொடக்கம்?

தமிழகம் மற்றும் கேரளா இணைந்து நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன.

தமிழகம் மற்றும் கேரளா இணைந்து நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ள நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, வனப்பணியாளர்களுக்கு அட்டக்கட்டியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டம்
தமிழக அரசு கடந்தாண்டு ரூ.25 கோடி செலவில் நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற கணக்கெடுப்பில் மொத்தம் 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொள்ளாச்சி – வால்பாறை சாலை, கிராஸ்ஹில்ஸ் வனப்பகுதிகளில் வரையாடு நடமாட்டத்தை காண முடிகிறது.

இந்நிலையில், இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்காக, வனப்பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அட்டக்கட்டியில் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குநர் கூறுகையில்: இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு, தமிழகம் மற்றும் கேரளா இணைந்து ஒருங்கிணைந்த முறையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் 14 வனக்கோட்டங்களில் 176 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள பொள்ளாச்சி கோட்டத்தில் 32 இடங்கள், திருப்பூரில் 22, கோவையில் 5 இடங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது.

பொள்ளாச்சி கோட்டத்தில் மட்டும் 100 வனப் பணியாளர்கள் இந்த பணிக்காக பயிற்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *