
கடந்த சில தினங்களாக தேனி நகர் முழுவதும் பல நூற்றுக்கணக்கான வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கும்பல் கும்பலாக பள்ளி செல்லும் மாணவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு பொம்மைகள்,பலூன்கள், உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக ஆங்காங்கே குழுக்களாக நின்று விற்பனை செய்து வருகின்றனர்.அதிலும் முக்கிய பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் குழுமியிருக்கும் விளையாட்டு மைதானங்கள் பள்ளிகளின் மைதான வளாகங்கள் போன்ற இடங்களில் காரண காரியங்கள் இன்றி நுழைந்து சிறுவர்களை நோட்டமிட்டு வருவதாகவும் நமது நிருபர்கள் குழு செய்தியினை சேகரித்துள்ளது.
எது எப்படியோ இது தொடர்பாக தேனி நகர் பகுதி தெருக்கள் வழியாக இதுபோன்று விற்பனை செய்து வரும் நபர்களிடமிருந்து பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும் எனவும் ஏதேனும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது சந்தேகத்திற்குரிய விஷயங்களையும் கண்ணில் கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கம்படியும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இதுபோன்று வடமாநிலத்தில் இருந்து விற்பனைக்காக நமது நகர் புறங்களில் சுற்றி தெரியும் சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரணை மேற்கொண்டால் ஏதேனும் திருட்டுச் சம்பங்களிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்தும் வேறு ஏதேனும் விபரீதங்கள் ஏற்படாத வண்ணமும் பாதுகாக்க வழிவகையாக அமையும் என்ற கருத்தினை இனிவரும் தலைமுறை நாளிதழின் சிறப்பு நிருபர் குழுவின் சார்பாக முன் வைக்கிறோம். மேலும் இந்தச் செய்தி பொதுமக்கள் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவுக்காக மட்டுமே!இதுவரையிலும் எந்த பகுதியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதையும் நடைபெறுவதற்கு முன்பே விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இதனை வெளியிடுகிறோம்.எனவே பொதுமக்களே உஷாரு! உஷாரு!!
சிறப்பு நிருபர் குழு
