
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பெரியகுளம் பிரபல பவளம் திரையரங்கம் எதிர்புறம் இயங்கிவரும் தன்மயாஸ் தங்கும் விடுதியில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து முறைகேடாக பாலியல் தொழில் நடந்து வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்புகார். இதற்கென இவர்கள் சமூக வலைதளங்களில் பெரியகுளம் பகுதி பவளம் தியேட்டர் எதிர்புறம் செயல்பட்டு வரும் இந்த மசாஜ் சென்டர் குறித்த விளம்பரங்களையும் தொடர்பு எண்களையும் பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் மற்ற காரணங்களுக்காக உழவும் இளைஞர்களையும் மாணவர்களையும் அப்பகுதி பொது மக்களையும் சபலப்படுத்தும் நோக்கோடு இவர்களின் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சபலம் ஏற்படுத்தி பல ஆயிரங்களில் பணத்தை வசூல் செய்து கொண்டு அழகிகளிடம் அடைக்கலம் புகச் செய்வதாக கூறி அவர்களின் எதிர்கால கனவுகளை குழிதோண்டி புதைத்து வரும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து தகுந்த சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் எது எப்படியோ மக்கள் நலனில் அக்கறையோடு 24 மணி நேரமும் பணி செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களின் கீழான இந்த ஆட்சியில் இது போன்ற இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் புல்லுருவிகள் யாராக இருப்பினும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இளைஞர்களின் வாழ்வு வளம்பெற வழி செய்யுமா? தேனி மாவட்ட காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பெரியகுளம் நகர் காவல் துறை.
