டெல்லி: அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செய்தார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அம்பேத்கர் உருவ படத்திற்கு இன்று காலை 9 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடியும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இன்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் மோடி கூறியிருப்பதாவது:- மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு ஆசீர்வதிக்கப்படட்டும் என்று கூறியுள்ளார்.